மணிப்பூர்: ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை தடுக்க முயன்ற காவல்துறை

மணிப்பூர்: ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை தடுக்க முயன்ற காவல்துறை
பிரசுரிக்கப்பட்டது

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூருக்குச் சென்று மக்களை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங்கும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் ராகுல் காந்தி பாதிக்கபபட்டவர்களை காண மணிப்பூருக்கு வியாழக்கிழமை புறப்பட்டார். சுரசந்துபுர் பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியை பிஷ்னபூர் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் காவல்துறை கூறியது. இருப்பினும் அவர் ஹெலிகாப்டரில் தனது பயணத்தை தொடர்ந்தார். நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல், அங்குள்ளவர்களோடும் கலந்துரையாடினார். குழந்தைகளோடு அமர்ந்து உணவருந்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: