You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் தலித் மாணவரிடம் காவல்துறை அத்துமீறியதா?
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தசாமி. எம்ஏ., எம்.பில் (MA M.Phil) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021ஆம் ஆண்டு முடித்து விட்டு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் (Mass Communication) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஏப்ரல் 24ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் 13வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால சோழன் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது. அரவிந்தசாமியும் பட்டம் பெறுவதற்காக சக மாணவர்களுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
அரவிந்தசாமி ஆளுநருக்கு எதிராக கருப்பு பேட்ச் மற்றும் கருப்பு மாஸ்க் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அரவிந்தசாமி பிபிசியிடம் பேசுகையில், தனிப்பிரிவு போலீஸார் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறை மின்சார கட்டுப்பாட்டு அறை என்பதால் மிகவும் வெப்பமாக இருந்தது. எனது மேல் சட்டை மற்றும் பேண்டை கழற்றச் செய்தனர். நான் கருப்பு நிறத்தில் உள்ளாடைகள் அணிந்திருப்பதை பார்த்த காவல்துறையினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தது போல் தெரிகிறதே என கேட்டு என் ஆணுறுப்பிற்கு மேல் கையை வைத்து சோதனை செய்தார்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்