பிபிசி 100 பெண்கள்: தென் கொரிய இசை உலகின் முடிசூடா மெய்நிகர் ராணிகள் - காணொளி

காணொளிக் குறிப்பு, தென் கொரிய இசை உலகின் முடிசூடா மெய்நிகர் ராணிகள்
பிபிசி 100 பெண்கள்: தென் கொரிய இசை உலகின் முடிசூடா மெய்நிகர் ராணிகள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

எடெர்னிட்டி என்ற மெய்நிகர் பாப் நட்சத்திர கதாபாத்திரங்கள், Pulse9 என்ற செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. பார்க் ஜியூன் இந்த நிறுவனத்தின் சிஇஓ.

ஆரம்பத்தில், இந்த நிறுவனம் 101 கற்பனை முகங்களை உருவாக்கியது. கதாபாத்திரங்களின் அழகைப் பொறுத்து அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அழகு, கவர்ச்சி, அப்பாவி, புத்திசாலி போன்ற குணங்களாக அவை சித்திரிக்கப்பட்டன. பிறகு, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தென் கொரிய கே பாப் இசை உலகம்

இன்-ஹவுஸ் டிசைனர்கள் பின்னர் ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வெற்றி பெற்ற கதாபாத்திரங்களை அனிமேஷன் செய்யும் பணியில் ஈடுபட்டு இந்த நட்சத்திரங்களுக்கு மெய்நிகராக உயிரூட்டினர். இந்த கதாபாத்திரங்கள் மூலம் பல செய்திகள் உலகுக்கும் இசை சமூகத்துக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: