2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவிருக்கிறதா? 2003-2023 இடையே என்ன ஒற்றுமை?
கடந்த 2003 ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 90ஸ் கிட்ஸ் உள்பட பலரையும் அழ வைத்த போட்டி அது.
ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியது. ரிக்கி பாண்டிங்கின் பேட்டில் ஸ்பிரிங் இருக்கிறது என்பன போன்ற பல கதைகள் உலா வந்தன. அந்தளவுக்கு இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார் ரிக்கி பாண்டிங்.
அவர் சேர்த்த 140 ரன்கள் இந்திய ரசிகர்களுக்குத் தீராத வலியைத் தந்தது. கிரிக்கெட்டில் ஊறிப்போன இந்திய ரசிகர்கள் அன்று இரவு தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள்.
காரணம், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றது இந்தியா. ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



