அயோத்தி: ராமர் கோவில் அரசியல் இனி எடுபடுமா?

காணொளிக் குறிப்பு, அயோத்தி: ராமர் கோவில் அரசியல் இனி எடுபடுமா?
அயோத்தி: ராமர் கோவில் அரசியல் இனி எடுபடுமா?
பிரசுரிக்கப்பட்டது

அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நடந்து முடிந்திருக்கிறது. ஒருகாலத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது ராமர் கோவில் உள்ளது. எனினும், அது முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.

சமீப தசாப்தங்களில், அயோத்தி விவகாரம் மத விவகாரம் மட்டுமின்றி அரசியல் விவகாரமாகவும் இருந்து வந்திருக்கிறது. ராமர் கோவில் இயக்கம் இந்துத்துவாவையும் இந்தியாவில் பெரும்பான்மைவாதத்தையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அது மட்டுமில்லாமல் இந்திய அரசியலின் இயல்பையும் மாற்றியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அரசியல் தற்போதும் ராமர் கோவிலையே மையம் கொண்டிருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் உருவெடுக்குமா?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)