80 செ.மீ. கிழக்கில் நகர்ந்த பூமி சுழலும் அச்சு: காரணம் என்ன?

80 செ.மீ. கிழக்கில் நகர்ந்த பூமி சுழலும் அச்சு: காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பூமி சுழலும் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது.

நிலத்தடி நீரை மனிதர்கள் அதிகமாக உறிஞ்சி எடுப்பது கடலின் மட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.

இந்த ஆய்வி படி, பூமத்திய ரேகை (mid-latitudes) மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதுதான் சுழல் அச்சின் கோணத்தை மாற்றுவதில் அதிகப் பங்காற்றுகிறது. அதிகமான நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டிருப்பது வடமேற்கு அமெரிக்காவிலும், வடமேற்கு இந்தியாவிலும் தான், என இந்த ஆய்வு கூறுகிறது. (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: