You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்னியின் செல்வன் - சோழர்களின் ஆயிரம் ஆண்டு பழமையான கலங்கரை விளக்கம் எங்கே இருக்கிறது?
பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியப் பங்கு வகிக்கும் கலங்கரை விளக்கம், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குழகர் கோவில் ஆகியவை இப்போது எந்த நிலையில் இருக்கின்றன? அங்கே எப்படிச் செல்வது ?
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் குறிப்பிடப்படும் இடங்கள், தற்போது பலரும் சென்று பார்த்துவரும் இடங்களாக மாறியுள்ளன. ஆனால், அந்தக் கதையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கமும் குழகர் கோவிலும் இன்னும் பலரது பார்வையில் படாத நிலையில்தான் இருக்கின்றன.
'பொன்னியின் செல்வன்' நாவலில் வீர நாராயணம் ஏரிக்கரை, கடம்பூர் அரண்மனை, கோடியக்கரை கலங்கரை விளக்கம், குழகர் கோவில், பழையாறை, தஞ்சாவூர், திருப்புறம்பியத்தில் உள்ள பிருத்வீபதியின் பள்ளிப்படை கோவில், நாகப்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படும் புத்த விகாரை, இலங்கையில் மதோட்டம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.
அவற்றில் நாகப்பட்டினம் புத்த விகாரையும் கடம்பூர் அரண்மனையும் முற்றிலும் அழிந்துவிட்டன. மீதமுள்ள இடங்களில் அதிகம் அறியப்படாதவையாக கோடியக்கரையில் உள்ள கலங்கரை விளக்கமும் குழகர் கோவிலும் இருக்கின்றன
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்