ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனைகளை அப்புறப்படுத்திய காவல்துறை
ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரங்கனைகள் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருந்த நிலையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனை சாக்ஷி மாலிக், காவல்துறையினர் தங்களை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் தங்களின் கூடாரங்களை அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



