ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் – நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? - காணொளி
கடந்த சனிக்கிழமை காலை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
ஒரு நாள் கழித்து இஸ்ரேலிய பதிலடி கொடுத்தது. காசாவில் 1000க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ நிலைகள், ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் மற்றும் போராளிக் குழுவால் நடத்தப்படும் வங்கிகள் ஆகியவை இதில் அடங்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒன்று, காசாவில் இண்டர்நெட் மையமாகச் செயல்படும் வாடன் கோபுரத்தை குறிவைத்தது. காசாவிற்கு மின்சாரம் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை.
காஸாவில், பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



