குஜராத்: கடும் வெப்ப அலையில் தினசரி வாடும் எளிய மக்கள் சந்திக்கும் சவால்கள்
குஜராத்தின் ஆமதாபாத்தில், லோடிங் (Loading) ரிக்ஷா ஓட்டுநராகப் பணிபுரிகிறார் லலிபென். இந்தப் பகுதியில் 42-45° செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இந்த கடுமையான வெப்பத்தில் லோடிங் ரிக்ஷாவில் பொருட்களை ஏற்றிச் செல்வது இவரது அன்றாட பணி.
“இங்கு 45 டிகிரி வெயில் உள்ளது. இவ்வளவு வெயிலிலும் ரிக்ஷா ஓட்டி, கடினமாக உழைக்கும்போது நமக்கு மயக்கம் வரும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும், கால்களின் வலியும் கூடும். எனவே எப்போதும் மருந்தை கைவசம் வைத்திருப்பேன். பொருட்களை ஏற்றி இறக்கும் போது, வெப்பத்தால் மூச்சு திணறுகிறது. எவ்வளவு வெயில் இருந்தாலும், உழைத்து தானே ஆக வேண்டும்.” என்கிறார் லலிபென்.
மே மாதம் முதல் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டு வருகிறது குஜராத் மாநிலம்.
முழு விவரம் காணொளியில்.
செய்தியாளர்: தேஜஸ் வைத்யா
படத்தொகுப்பு: பவன் ஜெய்ஸ்வால்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



