You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட சென்னையில் வேட்புமனு தாக்கலின் போது திமுக - அதிமுக உரசல் - நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியது.
இந்நிலையில் வட சென்னை தொகுதியில், யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக – அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாறிமாறி தேர்தல் அலுவலரிடம் முறையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதில் டோக்கன் வாங்கியதில் திமுக முறைகேடு செய்ததாக அதிமுக குற்றம்சாட்டியது. வேட்பு மனு தாக்கலின்போது திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்
மறுபுறம், முறைப்படி டோக்கன் பெற்றுதான் வேட்பு மனுத்தாக்கல் செய்தோம். தோல்வி பயத்தில் அதிமுக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்
இதுகுறித்த முழுவிவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)