You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீலகிரி மாவட்டத்தில் எருமைகள் அரிதாகி வருவதால் தோடர் பெண்கள் அச்சம் (காணொளி)
இந்தியாவில் எருமை என்ற விலங்கை பலரும் எமனின் வடிவமாகதான் பார்ப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில், நீலகிரி மலையில் உள்ள தோடர்கள் என்ற பழங்குடி சமூகத்தில் எருமை என்பது புனிதமான விலங்கு.
தோடர் இன பெண்களுக்கு திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கப்படும் எருமைகள் தங்கத்தை விட விலைமதிப்பானதாக கருதப்படும்.
புகுந்த வீட்டில் பெண்களின் மதிப்பை எருமை உயர்த்தும் என்ற கருத்து அவர்களிடம் உள்ளது.
ஆனால், தற்போது மலைப்பகுதியில் எருமை மாடுகளின் எண்ணிக்கை குறைந்த வருவதால், தங்களின் வழக்கம் மறைந்துவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது.
தோடர்களின் கோயில்களில் கோயிலுக்கு சொந்தமான எருமையின் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யை பயன்படுத்திதான் தீபம் வைக்கவேண்டும் என்பது அவர்களின் வழக்கம்...தோடர் பழங்குடிகளின் சுபநிகழ்வுகள் மற்றும் துக்க நிகழ்வுகளில் எருமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்