'என் கிட்ட மோதாதே' - அசத்தும் 2 அடி உயர பைக் - காணொளி

காணொளிக் குறிப்பு, 'என் கிட்ட மோதாதே' - அசத்தும் 2 அடி உயர பைக்
'என் கிட்ட மோதாதே' - அசத்தும் 2 அடி உயர பைக் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இவர்தான் ஹரிநாராயண திவாரி. 4 அடி உயரமுள்ள தனக்கு வசதியாக இருக்க வேண்டுமென 2 அடியில் ஒரு மோட்டர் பைக்கை உருவாக்க செய்திருக்கிறார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர், இந்த பைக்கில் தான் தினமும் வெளியே சென்று வருகிறார்.

அளவில் சிறியதாக இருந்தாலும், வழக்கமான பைக்கில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

அதிகபட்சமாக 120 கி.மீட்டர் வேகம் வரை இந்த பைக்கால் செல்ல முடியும். 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பைக் மற்ற பைக்கை போல நல்ல மைலேஜ் தருவதாக கூறுகிறார் இதன் உரிமையாளர்.

ஹரியின் இந்த பைக்கை பார்க்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வெளியூரில் இருந்து ஹைதராபாத் வருகின்றனர்.

குட்டி பைக்

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: