You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பெண்ணின் பிணத்துடன் பாலியல் உறவு கொள்வதை தடுக்க கல்லறைக்கு கதவு" - வைரல் தகவலின் உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை குறித்த விவாதம் சூடு பிடித்திருந்தது. பல ஊடக நிறுவனங்கள், இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கவே அக்கதவு நிறுவப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டன.
உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக ஊடகங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து, அது போலிச் செய்தி என்று கண்டறிந்தது. இந்தக் கல்லறை உண்மையில் இந்திய நகரான ஹைதராபாத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, உறுதிப்படுத்தப்படாமல் இந்த தகவலை வெளியிட்டதற்காக அது பற்றிய செய்தியை வெளியிட்ட இணையதளங்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றன.( முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்