You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த வாரம், 'ராஜீவ் வழக்கில் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி இந்திய அரசு மனு, ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் பேசியது, நாட்டை உலுக்கிய டெல்லி படுகொலை சம்பவம், இலங்கை பட்ஜெட் 2023, இந்தியாவுக்கு 'தோனி' ஏன் அவசியம்? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு மனு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும்படி நவம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது இந்திய அரசு. இனி அடுத்தது என்ன? விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்
ஜி20 மாநாட்டில் நரேந்திர மோதி பேசியது என்ன?
ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி காலநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று மற்றும் யுக்ரேனில் நடக்கும் போர் காரணமாக உலகின் விநியோகச் சங்கிலி சீரழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய ''புதிய உலகத்தைஉருவாக்குவதில்'' ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய பிரதமர் பேசியதை விரிவாக அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் -ஆறு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியின் மெஹ்ரோலி பகுதியில் நடந்த கொலை வழக்கில் துப்பு துலக்கப்பட்டுவிட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்ததான குற்றச்சாட்டின்பேரில் அஃப்தாப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 18 ஆம் தேதி அஃப்தாப் தனது லின் இன் பார்ட்னரான ஷ்ரத்தாவை கொன்றுவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வெவ்வேறு இடங்களில் வீசியதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது? முழுமையாக அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்
இலங்கை பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன?
இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவியளிக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. முக்கிய அறிவிப்புகளை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா?
டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு. ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா? விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்