You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முகமது ஷமி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறியது எப்படி?
இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளார் முகமது ஷபி நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடும் என்று இருந்த நிலையை மாற்றியமைத்தது ஷமியின் பந்துவீச்சு தான்.
இந்த உலகக் கோப்பை போட்டியில், ஹர்திக் பாண்டியா உடல் நலக் குறைவு காரணமாக பங்கேற்க முடியாததாலேயே ஷமி ஏழு போட்டிகளுக்கு பிறகு இந்த தொடரில் இடம் பெற்றார் .
ஷமி உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். விவசாயியான அவரது தந்தை சிறு வயதில் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவரால் கிரிக்கெட்டில் சோபிக்கமுடியவில்லை. தனது மகனுக்கான கிரிக்கெட் ஆர்வத்தை அவர் ஊக்குவித்தார். ஷமிக்கு 15வயது இருக்கும் போது 22 கி.மீ தள்ளி உள்ள மொராதாபாத்-ல் பயிற்சி பெற செய்தார்.
கிரிக்கெட் கிளப் ஒன்றில் கொல்கத்தாவில் கங்குலிக்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷமி வீசிய இரண்டு பந்துகள் பவுன்ஸ் ஆகின. உடனே மைதானம் எப்படி இருக்கிறது என கங்குலி சரி பார்த்தார். அதன் பிறகும் கூட ஷமியின் பந்துகள் பவுன்ஸ் ஆகின. ஆட்டத்தை நிறுத்திவிட்டு, கங்குலி ஷமியை அழைத்து பேசினார். அப்போது ஷமி தான் எப்படி வீசுகிறார் என்பதை கங்குலியிடம் விளக்கினார்.
பின் ரஞ்சி கோப்பை போட்டியில் இடம் கிடைக்காதது பற்றியும் கூறியுள்ளார். பிறகு கங்குலியின் பரிந்துரையில் அவருக்கு இடம் கிடைத்தது. 2013ம் ஆண்டு முதல் முதலாக இந்திய அணியில் இடம்பெற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஒரு நாள் போட்டி தான் ஷமியின் முதல் ஒரு நாள் போட்டியாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)