You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொசாத் போல 'ரா' செயல்பட்டதா? சர்வதேச ஊடகங்கள் எழுதியது என்ன?
இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான பரஸ்பர கசப்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதலில் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் இரு நாடுகளும் ஒன்று மற்றதன் தூதரக அதிகாரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றின.
இந்தியா-கனடா உறவில் கசப்பு அதிகரித்து வரும் நிலையில் செவ்வாய்கிழமை இரவு ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். நாங்கள் யாரையும் தூண்டிவிட விரும்பவில்லை,”என்றார்.
ட்ரூடோ இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததன் அர்த்தம் என்ன என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். இந்தியா-கனடா உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலை இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் எவ்வாறு பார்க்கின்றன என்பதையும் அறிந்துகொள்வோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்