You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துப்பாக்கிச் சூடு, தலைமறைவு வாழ்க்கை, ஆபத்தான பயணம் – ஒரு இளம் பெண்ணின் கதை - வீடியோ
சுமார் 3 மாதங்களுக்கு முன், இரானைச் சேர்ந்த 26 வயதேயான சீமா மொராத்பெய்கி என்ற பெண், தன் 3 வயது மகளைச் சுமந்து கொண்டு கண்ணி வெடிகள் நிறைந்த ஒரு மலைப்பாதையில் ஒரு ஆபத்தான நடை பயணத்தை மேற்கொண்டார்.
இரானுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ‘கடத்தல் பாதை’ எனப்படும் வழியில் நடந்து, மலைகளைக் கடந்து இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் குடியேறினார் சீமா.
இப்பயணத்தை மேலும் கடினமானதாக்கிய விஷயம், அவரது வலது கரத்தில் பதிந்திருந்த சுமார் 200 சிறிய உலோகத் துப்பாக்கிக் குண்டுகள்.
சீமா இவ்வளவு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளக் காரணம்?
கடந்த வருடம் இரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும், பொலீஸ் காவலில் இறந்துபோன மாஷா அமினி என்ற பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டும் நடந்த பெரும் போராட்டத்தில் சீமா கலந்து கொண்டார். ராணுவத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதன்பின் தலைமறைவாக இருந்தார்.
அடிபட்ட தனது கையில் இருக்கும் தொற்றினால் கையையே இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது, இரானிலிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தார்.
அதன்பிறகு என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்