You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியில் மழை குறுக்கிட்டால் ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்?
ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் 4வது அணி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் நாளை நடக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான ஆட்டத்தின் முடிவு ப்ளே ஆஃப் சுற்றில் 4வது அணியை முடிவு செய்யும்.
பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) நடக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் அணி, ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கும்.
ஆனால், ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்புள்ளதாகp பல்வேறு வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக பெங்களூருவில் பகல் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 சதவீதமும் மாலை நேரத்துக்குப் பின் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் 80 சதவீதமும் இருப்பதாக வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)