காணொளி: "நாங்கள் ஓடவில்லை" - கரூர் நெரிசல் பற்றி ஆதவ் அர்ஜுனா சொல்வது என்ன?
காணொளி: "நாங்கள் ஓடவில்லை" - கரூர் நெரிசல் பற்றி ஆதவ் அர்ஜுனா சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது "கரூரில் கூட்ட நெரிலசல் சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம்" என்றார்.
மேலும், "காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்." எனக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



