குழந்தையை தாக்கிய நாய்: மண்வெட்டியுடன் ஓடி சென்று காப்பாற்றிய தந்தை

குழந்தையை தாக்கிய நாய்: மண்வெட்டியுடன் ஓடி சென்று காப்பாற்றிய தந்தை
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் இரண்டு வயது குழந்தையை நாய் தாக்கும் காட்சி இது.

வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த குழந்தையை நாய் திடீரென தாக்க முயன்றுள்ளது. உடனே ஓடி வந்த தந்தை, தனது கையில் இருந்த மண்வெட்டியை வீசினார். இதனால் பயந்துபோன நாய் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றது. இந்த சம்பவத்தில் குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு