காணொளி: 'இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட்கள் வீழ்த்தப்பட்டன' - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, 'இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட்கள் வீழ்த்தப்பட்டன' - டிரம்ப்
காணொளி: 'இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட்கள் வீழ்த்தப்பட்டன' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட்கள் வீழ்த்தப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, "இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் அணு ஆயுத மோதலாக மாறும் நிலைக்குச் சென்றது. ஏற்கெனவே ஏழு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நிலைமை மோசமடைந்தது. அப்போது, நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? எங்களால் வர்த்தகம் செய்ய முடியாது என்றேன். தொடர்ந்து சண்டையிட்டால் உங்களுடன் எதுவும் செய்ய முடியாது, இதைத் தீர்க்க 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்றேன். சரி, இனி மோதல் எதுவும் இருக்காது என்றனர். இதைப் பலமுறை பயன்படுத்தி உள்ளேன்." என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு