You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "இரானை நோக்கி மற்றொரு படை செல்கிறது" - டிரம்ப்
இரானை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் செல்வதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஜூன் மாதத்தில் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மர்' என்ற நடவடிக்கையில் இரான் அணுசக்திக் கட்டமைப்புகளை முழுமையாக அழித்தோம். அதை நீங்கள் பார்த்தீர்கள்.
இதற்காக மக்கள் 22 ஆண்டுகளாக காத்திருந்தார்கள். அதை இறுதி கட்டத்தில் நாங்கள் செய்தோம். அவர்கள் அணு ஆயுதம் பெற இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருந்தது. அதை நாங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
இப்போது மற்றொரு படை இரானை நோக்கி செல்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அவர்கள் ஒப்பந்தம் செய்வார்கள் என்று நம்புகிறேன். முதலிலேயே அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு