காணொளி: இரானில் எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்

காணொளிக் குறிப்பு, இரானின் எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்
காணொளி: இரானில் எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

டெஹ்ரானில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஒரு எண்ணெய் கிடங்கு குறிவைக்கப்பட்டிருப்பதாக இரானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சனிக்கிழமை இரவு டெஹ்ரானில் பெரிய அளவில் தீ பற்றி எரிந்ததை நேரில் பார்த்தவர்கள் எடுத்த வீடியோ காட்டுகிறது. பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், கடும்புகை எழுந்ததாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். "இரவு பகல் போல மாறியதாக ஒருவர் பிபிசி பாரசீக மொழி சேவையிடம் தெரிவித்தார்.

இதனிடையே, டெஹ்ரானில் 'பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை' தாக்கியதாக, இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு