You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹூத்திகளை ஏமனுக்குள் புகுந்து தாக்கிய அமெரிக்கா, பிரிட்டன் - என்ன நடந்தது?
அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன. கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)