மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - கனிமொழி பேச முயன்ற போது பாஜக எம்பிக்கள் கூச்சல்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - கனிமொழி பேச முயன்ற போது பாஜக எம்பிக்கள் கூச்சல்
பிரசுரிக்கப்பட்டது

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேச முயன்றபோது பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர். இதற்கு கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பின்னர் பேசிய கனிமொழி, "இந்த மசோதா ரகசியமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு எதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதே எங்களுக்கு தெரியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மசோதாவை கொண்டுவருவது பற்றி விவாதிப்பதற்கு யாராவது அழைக்கப்பட்டார்களா என்பதும் எனக்குத் தெரியாது. திடீரென இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதும் என் இதயம் நம்பிக்கையை இழந்தது. இந்த மசோதா எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது கூட தெரியவில்லை." என்று கூறினார்.

முழு விவரம் காணொளியில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: