பால் வியாபாரம் செய்து கணவரின் கடனை அடைக்கும் கிராமத்து பெண்கள்
பால் வியாபாரம் செய்து கணவரின் கடனை அடைக்கும் கிராமத்து பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான தனது கணவர் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய் கடனை அடைத்துள்ளதாகக் கூறும் அந்த ஊரைச் சேர்ந்த ஜானகி, தற்போது 15 மாடுகளை பாரமரித்துவருகிறார்.
அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையையும் அவர் உயர்த்தியுள்ளார். பால் உற்பத்தி தொழில் காரணமாக கணவரை இழந்த பெண்களும்கூட அந்தக் கிராமத்தில் தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.
தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



