You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமாண்டோ படை பாதுகாப்பில் ஊர் சுற்றிய 'போலி' பிரதமர் அலுவலக அதிகாரி
பிரதமர் அலுவலகத்தில் மூத்த அதிகாரி என தன்னை அழைத்துக் கொண்டு, ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை ஏமாற்றிய குஜராத்தைச் சேர்ந்த நபரை ஸ்ரீநகர் காவல்துறை கைது செய்திருக்கிறது.
ஆனால், இந்த கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பாக அந்த நபருக்கு இதே காவல்துறை இசட் பிரிவு பாதுகாப்பு அளித்து அவரை பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
பிரதமர் அலுவலகத்தின் பெயரை பயன்படுத்திக் கொண்டு ஒரு மோசடி நபர், பலத்த பாதுகாப்பு நிறைந்த ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்துக்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை வந்து அங்குள்ள அதிகாரிகளை ஏமாற்றியிருக்கும் சம்பவம் பாதுகாப்பு ரீதியிலான பல கேள்விகளையும் எழுப்புகிறது.
இந்த விவகாரத்தில் செய்திக்குறிப்பையோ விளக்கத்தையோ ஜம்மு ஸ்ரீநகர் காவல்துறை வெளியிடவில்லை. அதே சமயம், நடந்த சம்பவம் தொடர்பான உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்