காஸாவில் நாளை காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் - இருதரப்பு உடன்பாடு என்ன?

காஸாவில் நாளை காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் - இருதரப்பு உடன்பாடு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலுடனான நான்கு நாள் போர் நிறுத்தம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் அமலுக்கு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. எனினும், போர் நிறுத்தம் தொடங்குவது குறித்து இஸ்ரேலிடம் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், பணயக்கைதிகளின் முதல் குழு வியாழனன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஒப்பந்தத்தின்படி, காஸாவில் இருந்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். 300 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இவர்களில் 121 பேர் சிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர், ஆனால் சில தலைவர்கள் இன்னும் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் ஒவ்வொரு பணயக்கைதிகளும் வீடு திரும்ப வேண்டும் என்றும் ஒவ்வொரு மணி நேரமும் கணக்கிடப்படும் என்றும் கூறுகின்றனர்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)