இலங்கை தேர்தல் 2024: புதிய ஜனாதிபதி யார்? விருப்ப வாக்குகள் என்றால் என்ன?
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் செப்டம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.
மும்முனை போட்டிகளை எதிர்கொண்ட இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை பெறப்போவது யார்? விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
மாலை நான்கு மணி நிலவரப்படி 39% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் அநுர குமார திஸாநாயக்க. அவரைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 17% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். இது நாள் வரை நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் 50%க்கும் குறைவாக வாக்குகளை முக்கிய வேட்பாளர்கள் பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



