You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உலகின் முதல் ஏஐ அமைச்சர் - ஊழலை தடுக்க அல்பேனியா புதிய முயற்சி
அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர்.
AI துறைக்கான அமைச்சர் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அந்த அமைச்சரே ஒரு AI தான்.
இவங்க பேருதான் டியல்லா (Diella). AI மூலம் உருவாக்கப்பட்ட அமைச்சர் இவங்கதான்.
அல்பேனியாவில் நிறைய ஊழல் நடப்பதாக வந்த புகாரையடுத்து, ஊழலை தடுக்க பிரதமர் எடி ராமா (Edi Rama) செயல்படுத்தியிருக்கும் புதிய யோசனைதான் இந்த AI அமைச்சர்.
அமைச்சர் என்றால் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும். அதுனால அரசு திட்டங்களை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்தும் Public Procurement துறையை டியல்லாவிடம் ஒதுக்கியுள்ளனர்.
அல்பேனிய அரசின் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்து அந்த துறை 100 சதவிகிதம் ஊழல் இல்லாமல் செயல்பட AI அமைச்சர் டியல்லா உதவி செய்வார் என பிரதமர் கூறியிருக்கிறார்.
ஆனால் எந்த அளவுக்கு இதில் மனித மேற்பார்வை இருக்கும் என பிரதமர் இன்னும் கூறவில்லை.
டியல்லாவை அல்பேனிய அரசு பயன்படுத்துவது இது முதன்முறை இல்லை.
இதற்கு முன்பே அல்பேனியாவின் டிஜிட்டல் சேவை தளங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை விண்ணப்பிப்பதற்கு மெய்நிகர் உதவியாளராக டியல்லா உதவி செய்திருக்கிறது என அல்பேனிய பிரதமர் கூறியிருக்கிறார்.
இந்த AI அமைச்சருக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இது சட்டத்துக்கு எதிரானது எனவும் முட்டாள்தனமானது எனவும் அல்பேனியாவில் எதிர்கட்சியினர் கூறியுள்ளனர்.
இதை அல்பேனிய அரசு அதிகாரபூர்வமாக நியமிக்கவில்லை. இது ஒரு அடையாள நடவடிக்கை தான்.
AI-யை முறையாக பயன்படுத்தினால் பொதுப்பணித்துறை மாதிரியான துறைகளில் ஊழலை தடுக்கலாம் என கிங்ஸ் காலேஜ் லண்டனை சேர்ந்த நிபுணர் முனைவர் அன்டி ஹோக்ஹாஜ் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு