You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீயில் பக்கத்து வீடுகள் எரிந்தபோதும் இந்த வீடு மட்டும் தப்பித்தது எப்படி?
லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வரலாற்றிலேயே மோசமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆல்டடீனாவில் ஊரே அழிந்தபோதும் ஒருவர் வீடு மட்டும் பத்திரமாக இருந்துள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஆல்டடீனா பகுதியில் ஒருவர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தார். அங்கு பரவிய ஈட்டன் காட்டுத்தீ, அவரது பகுதியில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களையும் அழித்துவிட்டது.
ஆனால், அவரது வீடு மட்டும் பாதிக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டார். தனது வீடு சிறிதும் பாதிக்கப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்ட என்ரிக் பால்கஸார், "இதற்கு நான் தகுதியானவனா?" என்று உணர்ச்சிமிகுதியில் கூக்குரலிடுவதைக் கேட்க முடிந்தது.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தை சின்னாபின்னமாக்கிய மிக மோசமான காட்டுத்தீயில், இதுவரை குறைந்தது 25 பேர் பலியாகியுள்ளனர், 12,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)