You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வசூலித்த வரியை திரும்பித் தருமா டிரம்ப் அரசு?
கடந்த ஆண்டு உலகளாவிய வரிகளை விதித்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
IEEPA என அழைக்கப்படும் 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி, அதிபர் டிரம்ப் வரிகளை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராகவும், 3 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பு வெளியான சற்று நேரத்திலேயே அனைத்து நாடுகளின் பொருட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வர உள்ளது
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? நீதிமன்றம் விதித்த தடை எதற்கெல்லாம் பொருந்தாது? இதுவரை வசூலிக்கப்பட்ட வரிகள் திருப்பி அளிக்கப்படுமா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு