You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பொழுதுபோக்காக குழந்தைகள் கொலை" - இஸ்ரேல் அரசு மீது அந்நாட்டு அரசியல் தலைவர் குற்றச்சாட்டு
"பொழுதுபோக்குக்காக குழந்தைகளை கொல்கிறது அரசு" என இஸ்ரேல் டெமாகிராட்ஸ் கட்சித் தலைவர் இஸ்ரேல் அரசை குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
அவர், " நாம் குழந்தைகளைக் கொல்லாத நல்லெண்ணம் கொண்ட நாடு என காலையில் கூறினேன். இந்த அரசில் உள்ள அமைச்சர்கள் குழந்தைகளின் பட்டினி மற்றும் மரணத்தைக் கொண்டாடும் போது, இதை சொல்ல வேண்டியதாக உள்ளது. இஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற அரசைதான் நான் குறிப்பிடுகிறேன், இஸ்ரேலிய பாதுகாப்பு படையை அல்ல.
பொழுது போக்கிற்காகவோ அல்லது கொள்கையாகவோ குழந்தைகளைப் கொல்லாத நல்லெண்ணம் கொண்ட நாடாக இஸ்ரேல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.
பணயக்கைதிகளை கைவிடலாம் மற்றும் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தலாம் என அரசு கூறுவது ஹமாஸ் செய்தி தொடர்பாளர் பேசுவது போல உள்ளது. காஸாவில் அணுகுண்டை பயன்படுத்தலாம் என கூறும் அரசு யூத அரசும் இல்லை, சியோனிச அரசும் இல்லை.
நான் மௌனமாக இருக்கப் போவதில்லை. காரணம், மௌனமாக இருப்பது என்பது இஸ்ரேல் பாதுகாப்புப் படையைக் கைவிடுவது, பணயக்கைதிகளை கைவிடுவது மற்றும் இஸ்ரேல் அரசைக் கைவிடுவதாக அர்த்தம்" என்று கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு