You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் எஸ். வளர்மதி ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர்.
தவெகவின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில், இன்று அதிமுகவில் இருந்து பலர் தவெக-வில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ரமேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்தனர்.
விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு