You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இடுக்கு பிள்ளையார் கோவிலில் 'ஓர் அடி' இரும்பு கேட் வைத்து கட்டுப்பாடு ஏன்?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று சிக்கிக்கொள்வதை தடுக்கும் விதமாக, ஓர் அடி அளவில் இரும்பு கேட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் சிக்கி ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே செல்ல "உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், வயதானவர்களுக்கு அனுமதியில்லை" என இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும் தற்போது பாதுகாப்பு கருதி ஓர் அடி அகலம் கொண்ட இரும்பு கேட் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இரும்பு கேட்டினுள் உள்ளே நுழையும் உடல் அமைப்பு கொண்டவர்கள் மட்டுமே உள்ளே சென்று வர அனுமதிக்கப்படுவதாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவிக்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு