பாலியல் கடத்தலுக்கு உள்ளாகி மீட்கப்பட்ட பெண்ணின் கதை(காணொளி)

காணொளிக் குறிப்பு, இளம் வயதிலேயே பாலியல் கடத்தலுக்கு உள்ளாகி மீட்கப்பட்ட பெண்ணின் அனுபவம்
பாலியல் கடத்தலுக்கு உள்ளாகி மீட்கப்பட்ட பெண்ணின் கதை(காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

இளம் வயதிலேயே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு, கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். 16 வயதிலேயே தன்னை விட மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர் மூலம் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், இன்று தன்னை போல பிறர் யாரும் பாதிக்கப்படக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் மனித கடத்தல் தடுப்புச்சட்டம், ஐ.பி.சி பிரிவு 370 ன் கீழ் ஒரு நபர் மனித கடத்தல் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

1956ஆம் ஆண்டின், நெறியற்ற கடத்தல் தடுப்பு சட்டம் அதாவது Immoral traffic prevention act-இன் கீழ் பாலியல் தொழிலுக்காக 16 வயதுக்குக் குறைவானவர்களை கடத்தலில் ஈடுபடுத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடும். போக்ஸோ சட்டம் குறிப்பாக வயது வராதோருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கான வரைமுறை, சட்ட நடவடிக்கை மற்றும் தண்டனையை முடிவு செய்கிறது.

பாலியல் வன்முறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: