"ஊழல், புள்ளி விவரங்களில் முறைகேடு, கூட்டாட்சிக்கு ஆபத்து" - மோதி ஆட்சி பற்றி பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர் பிபிசிக்கு பேட்டி
பரகல பிரபாகர் இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணர் மற்றும் பகுப்பாய்வாளர் ஆவார்.
இவர் தி க்ரூக்ட் டிம்பர் ஆப் நியூ இந்தியா (The Crooked Timber of New India) நெருக்கடியில் குடியரசு உள்ளது தொடர்பான கட்டுரைகள் என்ற நூலை எழுதியிருக்கிறார்.
அதில் இந்திய குடியரசு நெருக்கடியில் உள்ளது, இந்திய ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது, அரசமைப்பு நெருக்கடியில் உள்ளது போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், எதிர்காலம் குறித்தும் பிபிசிக்கு அவர் நேர்காணல் ஒன்றையும் அளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு நெருக்கடி, தேர்தல் பத்திர விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.

பட மூலாதாரம், X/PARAKALA PRABHAKAR
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



