You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணவர்களே முழுமையாக நிர்வகிக்கும் பள்ளி - எங்கே இருக்கிறது தெரியுமா?
இது தாய்லாந்தில் செயல்பட்டு வரும் புதுமையான கல்வி நிறுவனமான பாம்பூ பள்ளி. இங்கு எல்லாவற்றையும் மாணவர்களே கவனித்துக்கொள்கின்றனர்.
ஆசிரியர்களே இங்கு கற்பிக்கின்றனர். ஆனால், மாணவர்களே பள்ளியில் விதிகளை உருவாக்கி, ஒழுக்கத்தைச் செயல்படுத்துகின்றனர். இந்தப் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையிலும் இவர்கள் பங்கேற்கின்றனர். வேறு குழுவில் உள்ள மாணவர்கள் வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.
சீனியர் மாணவர்களால் உணவு பரிமாறப்படுகிறது. தாங்கள் உண்ணும் பாத்திரங்களை மாணவர்களே கழுவுகின்றனர். பாத்திரங்களை வேறு மாணவர்கள் சோதித்து, அதில் ஏதேனும் அசுத்தம் இருந்தால் மீண்டும் அதைக் கழுவுமாறு திருப்பி அனுப்புகின்றனர். மாணவர்களின் குணாதிசயத்தை மேம்படுத்துவதே இப்பள்ளியின் நோக்கம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)