You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குட் பேட் அக்லி: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கெனவே அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அஜித் நடிப்பில் தொடர்ச்சியாக வந்த ''சீரியசான'' படங்களுக்கு மத்தியில், ஜாலியான ஒரு 'கேங்க்ஸ்டர்' டிரைலர் பலரையும் ஈர்த்தது.
த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் மட்டுமின்றி, அர்ஜூன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, ரகுராம், ரெடின் கிங்ஸ்லி, ப்ரியா பிரகாஷ் வாரியர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு மற்றும் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிம்ரன் உள்ளிட்ட பலரும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை அமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
படத்தின் டிரைலர் வெளியான நாளில் இருந்தே, அதில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் ஏற்கெனவே அஜித் நடிப்பில் வெளியான படங்களின் முக்கியக் காட்சிகளை 'ரெஃபரென்ஸாக' இடம் பெற்றிருந்தது.
விஜயின் கில்லி படத்தில் வரும் 'காரப்பொரி' காட்சியும் இடம் பெற்று இந்தப் படம் நல்ல விருந்து படைத்துள்ளது என்று பல ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.
மங்காத்தா போன்று ஒரு ஜாலியான படமாக இது உள்ளதா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.