You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உதயநிதி ஸ்டாலின் சினிமா முதல் அரசியல் வரை சாதித்தது என்ன?
உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை, சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலுமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைவாகவே நகர்ந்து வந்திருக்கிறார். குருவி திரைபடம் மூலம் திரைத்துறையில் தயாரிப்பாளராக நுழைந்த அவர், விரைவாகவே திரையில் நாயகனாகி மாநிலம் முழுவதும் அறியப்படும் முகமானார்.
அரசியலில் நுழைந்த ஐந்தே ஆண்டுகளில் இன்று துணை முதல்வராக வளர்ந்துள்ளார். மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் துணை முதலமைச்சரான மூன்றாவது நபர் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் 15 ஆண்டுகளில் தமிழ்நாடு மூன்றாவது துணை முதலமைச்சரைக் காண்கிறது.
உதயநிதி ஸ்டாலின் அரசியலிலும், சினிமாவிலும் சாதித்தது என்ன? துணை முதலமைச்சர் பதவிக்கான அதிகாரங்கள் என்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)