தருமபுரி தொகுதி: பாமக கோட்டையில் வெற்றியை தக்கவைக்குமா திமுக? அதிமுக கணக்கு என்ன?
தருமபுரியில் வெயில் மிகக் கடுமையாக இருக்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அதைவிட அனல் பறக்கிறது. பாமக, திமுக, அதிமுக கட்சிகளுக்கிடையிலான தீவிரப்போட்டி சூழலில் வெப்பத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி, மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. வாழப்பாடி ராமமூர்த்தி, தம்பிதுரை, கே.வி. தங்கபாலு, அன்புமணி ராமதாஸ் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், எப்போதுமே கவனிக்கப்படும் தொகுதியாகவும் இருந்துவந்திருக்கிறது.
இந்தத் தொகுதியில் 1998 முதல் 2019 வரை நடந்த 6 தேர்தல்களில் நான்கு தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. இரண்டு முறை திமுக வெற்றிபெற்றிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் செ. செந்தில்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் அன்புமணி ராமதாஸைவிட சுமார் 63 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இந்த முறை தருமபுரி தொகுதியில் பிரசாரம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சியின் வியூகம் என்ன?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



