You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மிக்ஜாம் புயல்: திரும்பும் இடமெல்லாம் வெள்ளம், தத்தளிக்கும் சென்னை - காணொளி
மிக்ஜாம் புயலால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) முதல் பெரும் மழை பெய்து வருகிறது.
சென்னை மாநகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.
போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டுள்ளாதால் சென்னை நகரம் ஸ்தம்பித்திருக்கிறது.
பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.
மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று சென்னை பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள இருவரை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)