You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கையில் விரல்கள் இல்லாமல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி சாதித்த மாற்றுத் திறனாளி மாணவர்
சூரத்தை சேர்ந்த மீத்வா சோத்வாடியா என்ற மாணவர் விரல்கள் இல்லாமலேயே தேர்வு எழுதியுள்ளார்.
ஐந்து வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் தனது ஒரு கையையும் மற்றொரு கையில் இருந்த விரல்கள் அனைத்தையும் இழந்துவிட்டார் மீத்வா. இருப்பினும் விடாமுயற்சியோடு முயன்று தானே தேர்வெழுதி 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
எந்த உதவியும் இல்லாமல் தேர்வெழுதிய மீத்வா 89% மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதற்காக தினசரி நான்கு மணிநேரம் எழுதவும், படிக்கவும் செலவு செய்துள்ளார் அவர். முழு விவரங்களைக் காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)