அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய கார் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய கார் - என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய கார் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கான்வாய் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதியது. விபத்து நடந்ததைக் கண்டு அதிபர் ஜோ பைடன் அதிர்ச்சியடைந்தார்.

பாதுகாப்பு கருதி அவரை அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

தனது பிரசார தலைமையகத்தில் இருந்து மனைவி ஜில் பைடனும் ஜோ பைடன் வெளியே வந்த சில நொடிகளில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.

ஜோ பைடன், அமெரிக்கா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)