மாரிமுத்து: தமிழக குடும்பங்களின் மனதில் குடியமர்ந்த 'ஆதி குணசேகரன்'

காணொளிக் குறிப்பு, மாரிமுத்து: தமிழக குடும்பங்களின் மனதில் குடியமர்ந்த 'ஆதி குணசேகரன்'
மாரிமுத்து: தமிழக குடும்பங்களின் மனதில் குடியமர்ந்த 'ஆதி குணசேகரன்'
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மாரிமுத்து, ஆணாதிக்கமும் சாதிய மனப்பான்மையும் மிகுந்த தமிழ் ஆண்களின் உருவமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 57. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை என்ற ஊரைச் சேர்ந்த மாரிமுத்து, துணை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநராக வளர்ந்தவர்.

பிறகு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: