'புதிய கலாசாரத்தைக் கற்பது பிடிக்கும்' - குஜராத்தி மொழியில் பேசி இணையத்தை கலக்கும் கொரிய நபர்

காணொளிக் குறிப்பு, டோனி தென் கொரியாவின் சியோலை சேர்ந்தவர். ராதிகா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்.
'புதிய கலாசாரத்தைக் கற்பது பிடிக்கும்' - குஜராத்தி மொழியில் பேசி இணையத்தை கலக்கும் கொரிய நபர்
பிரசுரிக்கப்பட்டது

கொரியாவை சேர்ந்த டோனி, இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். இவர் குஜராத்தை சேர்ந்த தன் மனைவி ராதிகாவிடம் இருந்து குஜராத்தி மொழியைக் கற்று வருகிறார்.

டோனி தென் கொரியாவின் சியோலை சேர்ந்தவர். ராதிகா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். இருவரும் உயர் கல்விக்காக கனடாவுக்கு இடம்பெயர்ந்தனர்.

குஜராத்திற்கு செல்ல வேண்டும் என டோனி ஆர்வமாக உள்ளார்.

ராதிகாவும் கொரிய மொழியை மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டு வருகிறார். குஜராத்தி மொழியில் பேசும் வீடியோக்களால், டோனிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

செய்தியாளர் - கல்பனா ஷா

படத்தொகுப்பு - சுமித்ஜ் வைத்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)