You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோய் கட்டியுடன் தவித்த காகம்: அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் - நெகிழ்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு காகம் புற்றுநோய் கட்டியுடன் சுற்றித் திரிந்தது. ஆனால், இப்போது அதற்கு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் பறவைகளுக்கு இரை வைப்பதை வாடிக்கையாகக் கொண்டவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் மென்பொருள் ஊழியரான ஜெகதீசமூர்த்தி. அவர் தனது வீட்டுக்கு தினமும் வந்த இந்த காகத்திற்குக் கட்டி இருந்ததைக் கண்டறிந்தார்.
அதுகுறித்துப் பேசியபோது, "எனது வீட்டின் வாசலில் வைக்கப்படும் தண்ணீர் மற்றும் உணவுகளை உண்பதற்காக காகம் மற்றும் பறவைகள் வருவது வழக்கம். அப்படி தொடர்ச்சியாக வரும் ஒரு காகத்தின் உடலில் சிறிய அளவிலான கட்டி இருப்பதைக் கண்டேன்.
பிறகு நாளடைவில் அந்தக் காகம் பறக்க முடியாத அளவிற்குக் கட்டி பெரிதாகிவிட்டது. காகத்தை போர்வையைப் பயன்படுத்திப் போராடிப் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்," என்றார் ஜெகதீசமூர்த்தி.
காகத்தை பரிசோதித்த கால்நடை மருத்துவர், அது புற்றுநோய்க் கட்டி என்பதை உறுதி செய்தார். கட்டியை நீக்குவதற்கு மயக்க மருந்து உதவியுடன் காகத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தயாரிப்பு: தங்கதுரை குமாரபாண்டியன்
படத்தொகுப்பு: நிஷாந்த் சாமுவேல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)