'ஒரு மணி நேரம் விடாமல் அடித்தார்கள்' - உத்தர பிரேதசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இறைச்சி வியாபாரிகள்

'ஒரு மணி நேரம் விடாமல் அடித்தார்கள்' - உத்தர பிரேதசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இறைச்சி வியாபாரிகள்
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

உத்தர பிரேதசத்தில், மே 24ஆம் தேதி காலை அலிகரின் இறைச்சி தொழிற்சாலையில் இருந்து அந்த்ரோலிக்கு இறைச்சி எடுத்துச் சென்றுகொண்டிருந்த வியாபாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு கூடிய கும்பல் பசு மாமிசம் கொண்டு செல்வதாக வியாபாரிகள் மீது குற்றம் சாட்டி அவர்களை தாக்கியது.

காயமுற்ற நால்வரும் அலிகரின் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமுற்ற இளைஞர்கள் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் வாகனத்திற்குள் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வதையும், ஆனால் ஆக்ரோஷமாக இருந்த கும்பல் அவர்களை போலீஸ் ஜீப்பில் இருந்து வெளியே இழுத்து அடிக்கும் பல வீடியோக்களையும் பிபிசி பார்த்தது.

அங்கு என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு