You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 4 மகள்களும் அரசு ஊழியர்கள், தனி ஆளாக தாய் சாதித்தது எப்படி?
தினக்கூலியாக வேலை செய்துகொண்டே நான்கு மகள்களையும் படிக்க வைத்து, அரசுப் பணியில் அமர்த்திய தாயின் கதை இது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேபமகுலபள்ளே கிராமத்தில் வசிக்கும் கௌரம்மாவின் மகள்களான வீணா குமாரி, வாணி, வனஜாக்ஷி, ஸ்ரீஷா நால்வரும் தற்போது பலருக்கும் முன்மாதிரியாக உள்ளனர்.
வீணா குமாரி இன்று ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். சிறு வயதில் சந்தித்த நெருக்கடியான தருணங்கள் நன்றாகப் படிக்க ஊக்கமளித்ததாக அவர் கூறுகிறார்.
கௌரம்மாவின் இரண்டாவது மகள் வாணி 2016-ஆம் ஆண்டு அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பது நல்லதென பலர் அவரது அம்மாவிடம் கூறியதாக அவர் கூறுகிறார்.
கௌரம்மாவின் மூன்றாவது மகள் வனஜாக்ஷியும் இந்த ஆண்டு கான்ஸ்டபிளாகத் தேர்வாகியுள்ளார்.
கடைசி மகள் ஸ்ரீஷா இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியராக தேர்வாகியுள்ளார். வீணாவும் வாணியும் திருமணம் ஆனவர்கள்.
அனில்குமார் கௌரம்மாவின் இரண்டாவது மருமகன், மாமியாரின் உழைப்பு வீணாகக் கூடாதென தனது மனைவியின் இளைய சகோதரிகளுக்கு உதவியதாக கூறினார்.
இவர்கள் சொல்வது என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு